இலங்கைக்கு வருகை தந்து காலி ஜிந்தோட்டையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இரண்டு இந்திய பெண்கள் மற்றும் அவர்களது மூன்று மகள்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் 34 மற்றும் 38 வயது, மற்றும் அவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் 5,6,9 வயதுடையவர்கள்.

5 ஆம் திகதி எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி அவர்கள் விடுதிக்கு வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை விமான நிலையங்களினூடாக இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி