நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அழைத்துவர முடியாது என அமைச்சர் இதன்போது கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபையில் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியிலான தடையெதுவும் இல்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இது குறித்து வினவப்பட்டமைக்கு பதிலளிக்கும் போதே சட்ட மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி