அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃபெப்ரல் அமைப்பு, கடந்த ஆண்டுகளைப் போல கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வரமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய A மற்றும் Aa பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மாத்திரமே அவர்கள் விஜயம் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்காளர் தகவல்களைச் சேகரிக்க வேண்டிய வீடுகளுக்கு மாத்திரமே உத்தியோகத்தர்கள் வருவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஃபெப்ரல் அமைப்பின் படி, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையை அவதானிக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், உத்தியோகத்தர்கள் தகவல்களைச் சேகரித்த பின்னர், ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு தகுதியானவரா இல்லையா என்பது குறித்த உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளையும் அவர்களால் அவதானிக்க முடியும்.
ஏதேனும் முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், பிரதிநிதிகள் அது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்றும், அத்தகைய அறிவிப்பின் நகலை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவி ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றும் ஃபெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


