Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

களு கங்கை, களனி ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம்!

T

The Leader Desk

நவம்பர் 28, 2025 • 6:02 AM

களு கங்கை, களனி ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகைக்குள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் தரவு பகுப்பாய்வுகளுக்கு அமைய, அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • களனி ஆற்றுப் படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதன் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
எழுத்து அளவு:

படுகைக்குள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் தரவு பகுப்பாய்வுகளுக்கு அமைய, அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத மற்றும் களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, இங்கிரிய, ஹொரண, தொடன்ங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தனுவர, மதுராவல மற்றும் அக்லவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட, களு கங்கையின் வெள்ளச் சமவெளியைச் சேர்ந்த தாழ் நிலங்களுக்கு இந்த வெள்ள நிலைமையினால் பாதிப்பு ஏற்படவுள்ளது.

இப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதன் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகளுக்குப் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 48 மணி நேரத்திற்குள் எஹெலியகொட, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹுப்பிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கெளனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகளுக்குப் பாரிய வெள்ள நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றுப் படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மழை வீழ்ச்சி நிலைமை, களனி ஆற்றின் மேல் படுகையில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி ஆற்றுப் படுகைக்குள் பராமரிக்கப்படும் ஆற்று நீர் அளவீடுகளின் பகுப்பாய்வுகளுக்கு அமைய இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சாரதிகளையும் பயணிகளையும் கோரப்பட்டுள்ளது.

தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...