Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்தம் காரணமாக பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து; இராணுவமும் தயார் நிலையில்!

T

The Leader Desk

நவம்பர் 28, 2025 • 5:47 AM

அனர்த்தம் காரணமாக பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து; இராணுவமும் தயார் நிலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
  • இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
  • அவசர அனர்த்த நிலைமைகளுக்கான உடனடி அழைப்பு இலக்கங்கள்: 117, 119 சுவசரிய (Suwasariya) சேவை: 1990 தீயணைப்புத் துறை: 110 இராணுவத் தலைமையகம்: 113 விமானப்படைத் தலைமையகம்: 116 என்ற இலக்கங்களுக்கு அழைக்கலாம்.
  • அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இராணுவம், ஏற்கனவே 20,500இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காகத் தீவு முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக, எந்தவொரு அதிகாரியாவது தான் நியமிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கு கடமைக்குச் செல்ல முடியாவிட்டால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடமைக்குச் செல்லுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர அனர்த்த நிலைமைகளுக்கான உடனடி அழைப்பு இலக்கங்கள்: 117, 119 சுவசரிய (Suwasariya) சேவை: 1990 தீயணைப்புத் துறை: 110 இராணுவத் தலைமையகம்: 113 விமானப்படைத் தலைமையகம்: 116 என்ற இலக்கங்களுக்கு அழைக்கலாம்.

தற்போது தீவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவப் படைகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இராணுவத் தளபதிக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இராணுவம், ஏற்கனவே 20,500இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காகத் தீவு முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேற்று (27) ஒரு நாளில் மட்டும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 3,790 பேர் வரையானோரை மீட்டுப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக மோசமான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் நிலவும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீதிகள் தடைப்பட்டுள்ளதால் இந்தக் மீட்புப் பணிகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இத்தடைகளுக்கு மத்தியிலும் மீட்புப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இராணுவத்துடன் மேலதிகமாக, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...