கடற்படைப் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று, அந்த பேருந்தில் உள்ள பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா வாவி பாலத்தின் மீது 70 பயணிகளுடன் ஒரு பேருந்து சிக்கியுள்ளது.
இந்த பேருந்து கடந்த ஒன்றரை மணி நேரமாக அந்த இடத்தில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார. "நீங்கள் சொன்ன அநுராதபுர சம்பவம் உண்மைதான். அந்தப் பேருந்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அது சிக்கியுள்ளது. அங்கு 60 பேர் இருப்பதாகவே தகவல் கிடைத்துள்ளது. தற்போது 2 இராணுவப் பிரிவுகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ஒரு ஹெலிகாப்டரையும் வரவழைப்பதாகவும் அவர் கூறினார்."


