Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

லசந்தவை சுட்டுக்கொல்ல ரூ. 20 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ள 'டுபாய் லொக்கா'

T

The Leader Desk

அக்டோபர் 28, 2025 • 4:41 AM

லசந்தவை சுட்டுக்கொல்ல ரூ. 20 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ள 'டுபாய் லொக்கா'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேகநபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
  • குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்று முன்தினம் (26) அதிகாலை கேகிராவ பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.
  • அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.
எழுத்து அளவு:

நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட போது, இந்தக் கொலை 'டுபாய் லொக்காவின்' ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேகநபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்று முன்தினம் (26) அதிகாலை கேகிராவ பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.

கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அதில் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பல வழிகளில் சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றார். பினனர் மஹரகமவில் வைத்து விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் புலனாய்வு அதிகாரிகளும் துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

அதனையடுத்து பிரதேச சபைத் தலைவரின் கொலையை சுமார் 15 லட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி துப்பாக்கிதாரியையும் கேகிராவில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட சந்தேக நபர்கள் குழு நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...