அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உரிமதாரரும் கலால் கட்டளைச் சட்டத்தின் 22ஆவது பிரிவின் கீழ், குறிப்பிட்ட திகதியன்றோ அல்லது அத்திகதிக்கு முன்னரோ வரியைச் செலுத்த வேண்டும் என இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்துகிறது.
அதன்படி, குறித்த திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய வரியையோ அல்லது கட்டணத்தையோ முழுமையாகச் செலுத்தத் தவறும் உரிமதாரரின், போத்தலில் அடைக்கும் உரிமத்தை (bottling license) இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை எனவும், இது புதிய சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அது தவிர, குறித்த திகதியிலிருந்து 90 நாட்களைக் கடந்தும் செலுத்த வேண்டிய வரியையும் கட்டணத்தையும் முழுமையாகச் செலுத்தாத பட்சத்தில், அந்த உரிமதாரரின் அனைத்து உரிமங்களையும் இடைநிறுத்துவதற்கு புதிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், உரிமம் இடைநிறுத்தப்படும் காலம் 6 மாதங்களாகக் காணப்பட்ட நிலையில், அது புதிய வர்த்தமானி மூலம் 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கலால் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதைக் (பக்கச்சாட்டாகச் செல்வதைக்) குறைக்கும் நோக்கில், இந்த புதிய வரி செலுத்தும் காலப்பகுதி திருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


