உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
கானா நாட்டின் ஊடகங்களில் வெளிவந்த அந்த செய்தி இலங்கையின் ஊடகங்களிலும் நேற்று இரவு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த செய்தியை ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்று அவரின் என்றும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
என்றும்,அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து அந்த நாட்டின் பொலிஸில் முறைப்பாடு செய்தார் என்றும் அவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே ஏமாற்ற முயன்றதாக கூறப்படும் 11 பேரையும் கானா நாட்டின் பொலிஸார் கைது செய்தனர் என்றும் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தவிர, ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரின் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில், கானா நாட்டவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கம் விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கானா நாட்டின் தேசிய பாதுகாப்பு சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தங்கம் தருவதாகக் கூறி, 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இந்த சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், சந்தேகநபர்கள் நாடாளுமன்ற உறுப்பினருடன் பேணிவந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் மீண்டும் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினருக்கு 50 கிலோகிராம் தங்கம் விற்க குறித்த சந்தேகநபர்கள் முன்வந்துள்ளதாகவும், அந்த கொடுக்கல் வாங்கலுக்கு சட்டப்பூர்வ தன்மையை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க, கானா தேசிய பாதுகாப்பு சபை இந்த சந்தேகநபர்களை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்துள்ளதுடன், அவர்களைக் கைது செய்யும் போது, தங்கம் என சந்தேகிக்கப்படும் 2 மஞ்சள் நிற உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


