Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இ.போ.ச வேலைநிறுத்தம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2025 • 2:09 AM

இ.போ.ச வேலைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
  • தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
  • அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த கால அட்டவணை தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

பல நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

தனியார் பேருந்துகளுடன் ஒன்றிணைந்த கால அட்டவணைக்கு அமைய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக இ.போ.ச ஐக்கிய ஊழியர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த கால அட்டவணை தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே ஒன்றிணைந்த கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த போதிலும், நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கும் பேருந்துகள் வழமை போன்று பயணத்தை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி இன்றைய தினம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச சாரதி ஒருவர் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...