
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக கனமழை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தீவின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யலாம்.


