Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்த மரணங்கள் 31ஆக உயர்வு!

T

The Leader Desk

நவம்பர் 27, 2025 • 5:35 AM

அனர்த்த மரணங்கள் 31ஆக உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
  • கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வித்யார்த்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரின் ஒரு பகுதி நேற்று (26) இரவு இடிந்து விழுந்துள்ளது.
  • பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.
  • மேலும், கும்பக்கன ஓயா படுக்கையில் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால், மொனராகலை மற்றும் புத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களில் நிலவும் வெள்ள நிலைமை, பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வித்யார்த்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரின் ஒரு பகுதி நேற்று (26) இரவு இடிந்து விழுந்துள்ளது.

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி - கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவைக்கேற்ப ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நிலவும் கடும் மழை காரணமாக வட மத்திய மாகாணத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, நீரில் மூழ்கியுள்ள பின்வரும் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்வரும் வீதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் மேலும் தெரிவித்தார்:

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி: மன்னம்பிட்டி பகுதியில்

பொலன்னறுவை - சோமாவதி வீதி: சுங்காவில பகுதியில்

ஓயாமடுவ - செட்டிக்குளம் வீதி: முழுமையாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் - வாரியபொல வீதி: தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையுடன் தெதுரு ஓயா படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை, ஒரு பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தெதுரு ஓயா படுகையில் அமைந்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரசநாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரித்து வருவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கும்பக்கன ஓயா படுக்கையில் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால், மொனராகலை மற்றும் புத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களில் நிலவும் வெள்ள நிலைமை, பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நக்கல, கும்பக்கன, மாதுருகெட்டிய, ஒக்கம்பிட்டிய மற்றும் காமினிபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு இந்த அபாயம் உள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நில்வளா கங்கை படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி கங்கை படுக்கையில் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால் ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்.

பதுளு ஓயா படுகையின் பதுளை மற்றும் சொரணத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பதுளு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

இதேவேளை, யட்டிநுவர மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், கண்டி - கன்னோருவ வீதியிலும் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த மார்க்கங்களில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு ரயில் மார்க்கம் வெல்லவ பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதால் வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் ரயில் மார்க்கத்திலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை - பதுளை இடையே இயங்கும் அனைத்து ரயில்களையும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மகா ஓயா படுகையிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால் அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கலா ஓயா படுகையில் அமைந்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவுக்கு உள்ளான கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) இரவு அப்பகுதியில் பெய்த பலத்த மழையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனக்க ஹந்துன்பத்திராஜ தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அனர்த்த மரணங்கள் 31ஆக உயர்வு! | Tamil Leader | We Lead the Nation