Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

புதிய அரசியலமைப்பால் தமிழர்களுக்கு ஆபத்து!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2025 • 4:45 AM

புதிய அரசியலமைப்பால் தமிழர்களுக்கு ஆபத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகாரங்களும் நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
  • மாகாண சபை முறைமையினை இந்தியா இங்கே பரிந்துரைந்துள்ளதாலும் மாகாண சபை முறைமையில் தொடர் ஈடுபாட்டை இந்தியா காட்டிவருவதாலும் அந்த முறைமை நீக்கம் குறித்து புதுடில்லிக்கு நேரடியாகவே விளக்கமளிக்க ஜே.வி.பியின் உயர்மட்ட பிரமுகர்கள் குழுவொன்று தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எழுத்து அளவு:

அதிகாரங்களும் நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க ஆலோசித்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசின் மேலிடம், அப்படியான தீர்வை வழங்கும் பட்சத்தில் ஏற்கனவே தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரும் ஏற்பாடுகளை கொண்ட மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கிவிடுவதற்கும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாகாண சபை முறைமையினை இந்தியா இங்கே பரிந்துரைந்துள்ளதாலும் மாகாண சபை முறைமையில் தொடர் ஈடுபாட்டை இந்தியா காட்டிவருவதாலும் அந்த முறைமை நீக்கம் குறித்து புதுடில்லிக்கு நேரடியாகவே விளக்கமளிக்க ஜே.வி.பியின் உயர்மட்ட பிரமுகர்கள் குழுவொன்று தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே நீண்டகாலம் மாகாண சபைத் தேர்தல் நடக்காமல் மாகாண சபை முறைமை முடங்கியுள்ளதாலும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உத்தரவாதத்தை கொழும்பு வழங்குவதாலும் சிலசமயம் மாகாண முறைமை நீக்கத்துக்கு இந்தியா (தனது பிராந்திய பொருளாதார, பாதுகாப்பு நலன் கருதி) உடன்படுமாயின் தமிழர்களுக்குரிய குறைந்தபட்ச தீர்வும் அற்றுப்போகலாமென அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

-தமிழன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...