Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு; 3,500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா வந்தடைந்தது!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2025 • 3:36 AM

கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு; 3,500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா வந்தடைந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
  • உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக, GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15ஆம் திதகி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
  • உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியின் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக, GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15ஆம் திதகி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதன்படி, இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நாட்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டொன் என்பதுடன், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு 10 சதவீதம், அதாவது சுமார் 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...