Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயும் மரணம்!

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2025 • 3:04 AM

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயும் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
  • இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது, மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
  • இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
எழுத்து அளவு:


ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.

இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது, மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில், தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குபடுத்தினர். மரணத்திற்கான காரணம் உறுதியாகாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...