இலட்சம் ரூபாய்க்கும் (2.6 கோடி) அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


