அமைப்பின் இலங்கை பிரதிநிதிகள் அறிவித்துள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வாரம் திங்கள் அல்லது புதன்கிழமை எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், எரிசக்தி அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்ததாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கும் இடையில் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் கம்பியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம ரணவீர, அந்தக் கலந்துரையாடலின் பின்னரே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்றார். அதுவரை, விதிகளுக்கு அமைய வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
மின்சார ஊழியர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சினை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு வரை கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் தமது பிரச்சினையை சரியான முறையில் புரிந்துகொண்டதாகவும், இதனைத் தீர்த்து வைப்பதற்கு முன்வருவதாகவும் அவர்கள் கூறியதாக பராக்கிரம ரணவீர மேலும் தெரிவித்தார்.


