Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

‘முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அடுத்த மாதம் அரசு மீளப் பெறும்!’

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2025 • 4:09 AM

‘முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அடுத்த மாதம் அரசு மீளப் பெறும்!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
  • “நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரசு வீடுகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
  • கொவிட் தொற்றுக் காலத்தில் அந்த வீட்டை புனரமைக்க ரூபா 40 கோடியை பெற்றுள்ளனர்.
எழுத்து அளவு:

அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டும். நீதித்துறை மீதான பொது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீதியானது செல்வந்தர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தாது என்பதை மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.

“சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமல்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.

“நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரசு வீடுகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 33ஆயிரம் சதுர அடியில் வீடு எதற்கு? கொவிட் தொற்றுக் காலத்தில் அந்த வீட்டை புனரமைக்க ரூபா 40 கோடியை பெற்றுள்ளனர்.

“தியாகங்களைச் செய்யும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, தேவையற்ற செலவுகளை மக்கள் மீது சுமத்த முடியாது. முதலிம் நாம் தியாகங்களை செய்ய வேண்டும். தராதரம் பாராது எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...