Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரணில் கைது செய்யப்பட்ட போது நடந்த திடுக்கிடும் சம்பவம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2025 • 3:46 AM

ரணில் கைது செய்யப்பட்ட போது நடந்த திடுக்கிடும் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவரை விளக்க மறியலில் வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தனியனாக நின்று சட்டப் போராட்டம் நடத்தியவர் அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ்.
  • அந்தப் பயணத்திற்கான அழைப்பை மேற்படி பல்கலைக்கழகத்தின் வேந்தராக 1999 முதல் பணியாற்றி வந்தவரான மதிப்புக்குரிய போல் பிரபுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கி இருந்தார் அந்த அழைப்பின் பெயரில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனுக்குச் சென்று இருந்தார்.
  • இப்போது ரணில் கைது செய்யப்பட்டமையின் பின் போல் பிரபு திடீரெனக் காலமாகி உள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவரை விளக்க மறியலில் வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தனியனாக நின்று சட்டப் போராட்டம் நடத்தியவர் அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ்.

அத்துணை முயற்சி எடுத்த அவர் நேற்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கலாமா என்பது குறித்து நீதிவான் விசாரணை நடத்திய போது ஒரு விடயத்தை ஆதங்கத்தோடு சுட்டிக்காட்டினார்.

‘’இந்த நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியல்சாலையில் ஒரு மணித்தியாலம்கூட இருக்கவில்லை’’ என்று விசனத்துடன் தெரிவித்தார்.

விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேரடியாக சிறை வைத்தியசாலைக்கும், பின்னர் தேசிய வைத்தியசாலைக்கும் கூட்டிச் செல்லப்பட்டு விட்டார் என்பது தெரிந்த விடயம்தான்.

தாம் விளக்கமறியல் உத்தரவை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொடுத்தும், முன்னாள் ஜனாதிபதியை ஒரு மணி நேரம் கூட விளக்கமறியல் சாலையில் வைத்திருக்க முடியவில்லை என்ற பெரும் ஆதங்கம் போலும் அவருக்கு.

நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற போது ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன முன்னிலையானார். இவர் முன்னர் வெளிவிவகார அமைச்சர், சட்டம் – ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் விமான சேவை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகளையும் சட்டமா அதிபர் பதவியையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நேற்றைய வழக்கு விசாரணையின் போது திடுக்கிடும் சம்பவம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்ட பின்னர் பிரிட்டனில் மெரிலேபோனின் மதிப்புக்குரிய போல் பிரபு திடீரென காலமானார் என்ற இந்த தகவல்தான் அது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வோல்வர்ஹம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்றுத்தான் மேற்படி பிரிட்டிஷ் விஜயத்தை மேற்கொண்டு இருந்தார். அந்தப் பயணமே இப்போது சர்ச்சைக்குரியதாக மாறி இருக்கின்றது. அந்தப் பயணத்திற்கான அழைப்பை மேற்படி பல்கலைக்கழகத்தின் வேந்தராக 1999 முதல் பணியாற்றி வந்தவரான மதிப்புக்குரிய போல் பிரபுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கி இருந்தார் அந்த அழைப்பின் பெயரில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனுக்குச் சென்று இருந்தார். இப்போது ரணில் கைது செய்யப்பட்டமையின் பின் போல் பிரபு திடீரெனக் காலமாகி உள்ளார்.

தமது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்தவர் அந்தக் காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி கூட போல் பிரபுவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் திலக் மாரப்பன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆறு விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு ஒன்று ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் பரிசீலனை செய்து மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிமன்றுக்கு நேற்று சமர்ப்பித்திருந்தது.

ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. தேர்ந்த வைத்தியர் குழுவினால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவரது உயிருக்கு ஆபத்து நிகழலாம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின் முன்னிலையில் சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு மாற்று வழி இருக்கவில்லை என்று நீதிமன்ற செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அவரது மருத்துவ அறிக்கை பற்றி யாழ்ப்பாணத்தில் என் நண்பரான மருத்துவர் ஒருவர் ஒரு கருத்துச் சொன்னார். வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ரணிலுக்குள்ள மருத்துவ குறைபாடுகளில் ஒன்றாக அவருடைய உடலில் சோடியம் சத்து குறைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்தகைய நிலைமை வயதில் மூத்தவர்களுக்கு நேரும் போது அவர்கள் குழப்பமாக பிதற்றும் விதத்தில் நடந்துகொள்வார்கள் என்று அந்த வைத்தியர் கூறினார். ஆனால் கைது சமயத்தின் போது கூட நீதிமன்றத்தில் மிகத் திடமாகவும் உறுதியாகவும் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்டார் என்று தெரிகின்றது. சோடியம் குறைபாட்டுடன்கூட அவர் அவ்வளவு தூரம் மதிநுட்பத்தோடும் உற்சாகத்தோடும் தெளிவாகவும் செயல்பட்டார் என்றால் அது அவரது விசேட மன தைரியத்தின் உறுதியின் விளைவாக மட்டும்தான் இருக்கும் என்றார் அந்த மருத்துவர்.

வைத்தியர்களின் இந்த அறிக்கைப்படி பார்த்தால் இவ்வளவு பின்னடைவுகளுக்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்க தினசரி முழு உறுதியோடும் திடசங்கற்பத்தோடும் செயற்பட்டமை என்பது பாராட்டுக்குரியது என்றார் அந்த மருத்துவர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தமது உடல்நிலை மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் சில தினங்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனக் கூறப்பட்டது.

உடல்நிலை சுமுகமானதும் அவர் மக்களுக்கு உரையாற்றுவார் என்று அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்தது.

-காலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணில் கைது செய்யப்பட்ட போது நடந்த திடுக்கிடும் சம்பவம்! | Tamil Leader | We Lead the Nation