மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே அந்த யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அதன்போதே, இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவினால் கொண்டுவரப்பட்ட அந்த ​யோசனையை  முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல வழி மொழிந்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி