மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மியன்மாரின் இலங்கைக்கான தூதரகத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ஏப்ரல் 17 ஆம் திகதி பொதுமன்னிப்பு தினமாகும்.

இதற்கமைய, கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கம், மியன்மார் அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், குறித்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நாளைய தினம் (19) உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாம் வினவியபோது, விடுதலை செய்யப்படும் மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

அத்துடன், மீனவர்களின் 2 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி