41 இலங்கைப் பெண்கள் சௌதி அரேபியாவின் நாடு கடத்தும் நிலையைத்தில் மாதக்கணக்காக சிறை வைக்கப்பட்டு துன்பப்படுவதாக ‘சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு” கூறுகிறது.

‘கபீல் முறை” காரணமாக தடுத்து வைக்கபட்டுள்ள பெண்கள், இலங்கை அதிகாரிகளின் தலையீட்டுடன் இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளும் வரை நிர்க்கதி நிலையில் உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டுகிறது.

8 மாதங்களிலிருந்து 18 மாதங்கள் வரையிலான காலம் வரை ரியாத் நாடு கடத்துவதற்கான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களில் மூவர் சிறு குழந்தைகளுடன் தடுத்து வைக்கபட்டிருப்பதோடு, அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவசர சிகிச்சையும் தேவைப்படுகிறது. சௌதி அரேபியாவில் பணியாற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் அனுசரனையாளர் முறை காரணமாக இவர்கள் படும் கஷ்டம் இதிலிருந்து தெரிகிறது.

வெளிநாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் தொழில் சட்டங்களின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன், இத்தகைய நிலையில் இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக் கூறிய மனித உரிமைகள் அமைப்பு தடுத்து வைக்கப்பட்டு கஷ்டப்படும் பெண்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் அறவிக்கப்படவில்லையெனவும், வழக்குரைஞர்களின் உதவியோ, தூதுவராலயத்தின் உதவிகளைப் பெறுவதற்கான வசதிகளோ இல்லையென மேலும் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி