தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.

நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)' நூல் சனிக்கிழமை(10) மாலை(இரவு) மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மௌலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை. தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மட்பாண்ட எச்சங்கள் அரபியினருடையதா? இது எந்த கலாச்சாரத்திற்குரியது என்பதை அறியாதவர்களாகத்தான் இங்கு பகுப்பாய்வு செய்கின்ற தொழிநுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள்.எனவே தான் தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவாக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளிமி) உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், முக்கிய கல்விமான்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி