யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும், சில திரையரங்குகள் இன்னும் மூடப்படவில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை தொடர்பாக ஆராயப்படுவதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி