வருவதாக பொருளாதார மையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீன்ஸ் ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய் 280 முதல் 300 வரையிலும், கெரட் ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய் 110 வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய் 300 வரையிலும், இவ்வாறு காய்கறிகளின் விலைகள் படிப்படியாக உயர்ந்து வருவதாக பொருளாதார மையங்களின் தகவல்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலையுடன் காய்கறிகள் வீணாவது, சிறுபோக சாகுபடிப் பணிகள் நிறைவடைந்து மீண்டும் சாகுபடிப் பணிகள் ஆரம்பிக்கப்படுவது போன்ற காரணங்களால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரக்கறிகளின் விலைகள் உயரும் என்று பொருளாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நாட்களில் எலுமிச்சை ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய் 2,000 வரை உயர்ந்ததால், தேவை குறைவடைந்ததன் காரணமாக தற்போது எலுமிச்சை ஒரு கிலோவின் மொத்த விலை 1,300 ரூபாயாகக் குறைந்துள்ளது.


