Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரணிலுக்கான விளக்கமறியல் நீடிக்கப்படுமா?; இன்று தெரியவரும்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2025 • 12:11 AM

ரணிலுக்கான விளக்கமறியல் நீடிக்கப்படுமா?; இன்று தெரியவரும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நோயாளியாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
  • இதுதான் வழமையான சட்ட ஏற்பாடு.
  • ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த வழக்கின் போக்கு எப்படி அமையும் என்பதை இன்றைய தவணையின் போது இடம்பெறக்கூடிய சட்ட முடிவுகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.
எழுத்து அளவு:

நோயாளியாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த வழக்கின் போக்கு எப்படி அமையும் என்பதை இன்றைய தவணையின் போது இடம்பெறக்கூடிய சட்ட முடிவுகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்திற்கு முன்னிலையாக முடியாத நிலையில் வைத்தியசாலையில் இருப்பாரெனின், நீதவான் நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று, அவரைப் பார்த்து,உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். இதுதான் வழமையான சட்ட ஏற்பாடு. அது இன்று அது நடக்குமா என்று தெரியவில்லை.

இந்த வழக்கின் இன்றைய தவணையையொட்டி மக்களின் செல்வாக்கை - ரணிலுக்கான ஆதரவை - அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்களின்

எதிர்ப்பை - காட்டுவதற்காக பெருமக்கள் கூட்டத்தை இன்று தலைநகரில் எதிரணிகள் கூட்டவிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. அவற்றுக்கு மத்தியில் ரணில் நீதிமன்றுக்கு கொண்டுவரப்படுவாரா அல்லது நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று அவரை பார்வையிட்டு உத்தரவுகளை வழங்குவாரா என்பது இன்று நாள் கட்டவிழும்போதுதான் தெரிய வரும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...