leader eng

ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் இன்று காலை காலமானார். ஆயிருடைய திருவுடல் தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள் மதகுருமார் சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

யாழ் மறைமாவட்ட ஆயர்,குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி திங்கள் மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.

மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார்.

நாளை காலை 11 மணி யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மதியம் மன்னருக்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி