Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கடுகன்னாவ மண்சரிவு; வீதியை மீண்டும் திறப்பதில் சிக்கல்!

T

The Leader Desk

நவம்பர் 25, 2025 • 5:35 AM

கடுகன்னாவ மண்சரிவு; வீதியை மீண்டும் திறப்பதில் சிக்கல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • எனினும், தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்தப் பணிகளைச் செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று (25) ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
  • கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே வீதியை மீண்டும் திறக்க முடியும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்தப் பணிகளைச் செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று (25) ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் பௌதிக அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வது கடினம் என்பதால், லிடார் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு அளவீடுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், அந்த இடத்தை நீண்ட காலத்திற்கு நிலைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் பணி நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இந்த நீண்ட கால நிலைப்படுத்தும் பணிகளைத் திட்டமிட்டு, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிச் செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...