Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்நாட்டு மக்களில் 10% பேருக்கு சிறுநீரக நோய்!

T

The Leader Desk

நவம்பர் 25, 2025 • 5:05 AM

இந்நாட்டு மக்களில் 10% பேருக்கு சிறுநீரக நோய்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சதவீதம் (15%) வரையான பெரியவர்களுக்குச் சிறுநீரக நோய் இருக்கக்கூடும் எனவும் மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் அனுபாமா டி சில்வா தெரிவித்துள்ளார்.
  • அண்மையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதைக் கூறிய அவர், சிறுநீரக செயலிழந்த நோயாளிகளுக்குச் சிறந்த தீர்வு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனவும் குறிப்பிட்டார்.
  • மேலும், சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை மூலம் நோய் இருக்கிறதா என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை உடனடியாக ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சதவீதம் (15%) வரையான பெரியவர்களுக்குச் சிறுநீரக நோய் இருக்கக்கூடும் எனவும் மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் அனுபாமா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதைக் கூறிய அவர், சிறுநீரக செயலிழந்த நோயாளிகளுக்குச் சிறந்த தீர்வு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனவும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், சிறுநீரக நோய்க்கான விசேட வசதிகளைக் கொண்ட கொழும்பு மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் மட்டுமே இது குறித்து அறிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகப் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும், நச்சு உணவுகளை உட்கொள்வது, அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது, தசைகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் மற்றும் மருந்துகள் காரணமாகவும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் அந்த நிபுணர் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை மூலம் நோய் இருக்கிறதா என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை உடனடியாக ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்நாட்டு மக்களில் 10% பேருக்கு சிறுநீரக நோய்! | Tamil Leader | We Lead the Nation