Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மண்சரிவை அடுத்து பதுளை - கொழும்பு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு!

T

The Leader Desk

நவம்பர் 25, 2025 • 4:18 AM

மண்சரிவை அடுத்து பதுளை - கொழும்பு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
  • குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதன் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம்.
  • தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் 4 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

திறந்துவிடப்பட்டுள்ளது.

பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதேவேளை மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியில் மழை பெய்யாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் வாகன போக்குவரத்துக்காக ஒரு வழிப் பாதையை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதன் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் தலகாகொட மற்றும் பாணதுகம ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் 4 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மண்சரிவை அடுத்து பதுளை - கொழும்பு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு! | Tamil Leader | We Lead the Nation