Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; இருவர் கீழே குதித்து தப்பினர்!

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2025 • 3:27 AM

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; இருவர் கீழே குதித்து தப்பினர்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
  • நேற்று (24) இரவு 9.00 மணியளவில், புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
  • விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
  • காயமடைந்த ஆறு பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (24) இரவு 9.00 மணியளவில், புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆறு பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மலை உச்சிக்கு பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பன்சியகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...