மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர்.
இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன், எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வேனில் பயணித்த மூவரே உயிரிழந்த நிலையில், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


