நீங்கவில்லை எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும், அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட அபாயகரமான இடங்களைப் பரிசோதிக்கும் வரை மக்கள் மீண்டும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அதன் சிரேஷ்ட விஞ்ஞானி ஹசாலி சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து சோதனைகளை மேற்கொண்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும் வரை எக்காரணம் கொண்டும் அபாயகரமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பதுளை, கண்டி, நுவரெலியா, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட 'கண்காணிப்பு' (Watch) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள் எச்சரிக்கை):
கண்டி மாவட்டம்:
உடுதும்பர
மினிப்பே
மெததும்பர
தொலுவ
நுவரெலியா மாவட்டம்:
வலப்பனை
ஹங்குரன்கெத்த
நில்தண்டாஹின்ன
மத்துரட்ட
பதுளை மாவட்டம்:
சொரணாதொட்ட
லுணுகலை
மீகஹகிவுல
குருணாகல் மாவட்டம்:
ரிதிகம
மாத்தளை மாவட்டம்:
ரத்தோட்டை
அம்பன்கங்க கோரளய
உகுவெல
யடவத்த
பல்லேப்பொல


