ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.
அந்த விசேட ரயில், இம்மாதம் 29ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் ரயில் 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.
ரயில் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


