அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயலுடன் கூடிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயிரிடப்பட்ட நெற்காணிகளில் 23 சதவீதம் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, தேயிலை தொழில்துறைக்கும் முதற்கட்டமாக 35% நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், உற்பத்தியில் சுமார் 70% பங்களிப்பு வழங்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த மதிப்பீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


