விதமாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் பேரவை (Parliamentary Women's Caucus) இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இலச்சினைகளை அணிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சவித்திரி போல்ராஜ், வன்முறையின்றி கண்ணியமாக வாழ்வது மனித உரிமை என்பதை உலகம் முழுவதும் அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், ஆண்-பெண் வேறுபாடின்றி அனைவரும் வன்முறையின்றி வாழ உரிமை உண்டு என்றும், மற்றவர்களை வன்முறைக்கு உட்படுத்தாமல் வாழ்வது நமது பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாள் செயற்திட்டம் இன்று ஆரம்பமாகி டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.
இதற்கு இணையாக, இலங்கை முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார்.
வன்முறையின்றி கண்ணியத்துடன் வாழ்வது மனித உரிமை என்ற அடிப்படையில், 1991 ஆம் ஆண்டு முதல் இது குறித்து உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு, டிஜிட்டல் வெளியின் (Digital space) உள்ளே பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதில், அதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் வன்முறைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என அவர் வலியுறுத்தினார்.
அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்துக்கள் ஒருவருக்கொருவர் இருக்கலாம் என்ற போதிலும், மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், அவர்களை வன்முறைக்கு உட்படுத்தும் வகையிலும் வெறுப்புப் பேச்சுக்களை (Hate speech) வெளியிடுவதை பாராளுமன்றத்திலிருந்து நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


