Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற யாழ். ஆனந்தனின் படகு மீட்பு; மாமாவும் அதிரடியாக கைது!

T

The Leader Desk

அக்டோபர் 24, 2025 • 4:06 AM

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற யாழ். ஆனந்தனின் படகு மீட்பு; மாமாவும் அதிரடியாக கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
  • கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகு, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தொடரும் விசாரணைகளில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1761275566-ishara-l.jpg

இதேவேளை இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சேர்ப்பித்த படகு யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகு, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க, உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற யாழ். ஆனந்தனின் படகு மீட்பு; மாமாவும் அதிரடியாக கைது! | Tamil Leader | We Lead the Nation