Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு அமர்வில் இலங்கை நிலைமை; வெள்ளிக்கிழமை முழுநாள் ஆய்வு!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2025 • 4:22 AM

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு அமர்வில் இலங்கை நிலைமை; வெள்ளிக்கிழமை முழுநாள் ஆய்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
  • இலங்கை தொடர்பான விடயம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, பின்னர் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை என மொத்தம் ஆறு மணி நேரம் நடைபெறும்.
  • இதன்போது இம்முறை அது மொண்டெனேகுர, பெனின் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைமை தொடர்பாக மதிப்பாய்வு செய்யும்.
எழுத்து அளவு:



ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இதன்போது இம்முறை அது மொண்டெனேகுர, பெனின் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைமை தொடர்பாக மதிப்பாய்வு செய்யும்.

இந்த அமர்வில் வலுக்கட்டாயமாகக் காணாமல்போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் இடம்பெறும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான முதல் உலக மாநாட்டின் காணொளி காட்சிப்படுத்தப்படும்.

இலங்கை தொடர்பான விடயம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, பின்னர் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை என மொத்தம் ஆறு மணி நேரம் நடைபெறும்.

அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அந்தந்த நாட்டு அறிக்கைகள் மற்றும் பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுள்ள இந்தக் குழு, சம்பந்தப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும்.

ஜெனிவாவாவின் பலாய்ஸ் வில்சனில் உள்ள முதல் மாடி மாநாட்டு அறையில் இந்த அமர்வு நடைபெறும். அனைத்து பொதுக் கூட்டங்களும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கும், ஐ.நா. வலை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

  • காலை முரசு
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...