Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பதுளையில் மண்சரிவு அபாயம்; 238 குடும்பங்கள் பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றம்!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2025 • 5:12 AM

பதுளையில் மண்சரிவு அபாயம்; 238 குடும்பங்கள் பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
  • நேற்று (10) குறித்த நபர்களைப் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டார்.
  • "15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14 பிரிவுகள் மட்டுமே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.
  • களுக்கேலே மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட வேண்டியிருந்தது.
எழுத்து அளவு:

வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை பொழிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நேற்று (10) குறித்த நபர்களைப் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டார்.

"15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14 பிரிவுகள் மட்டுமே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. அனர்த்தத்தால் பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவும் இப்போது அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது. களுக்கேலே மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட வேண்டியிருந்தது.

"சொர்ணாதோட்ட பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர், ஊவா பரணகம பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர், ரிதீமாலியத்த பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர், மீகஹகிவுல பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட வேண்டியிருந்தது.

"ஹாலி-எல பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் என மொத்தமாக 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...