Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மன்னார் காற்றாலைகளை அமைக்கும் பணி நடக்கும்; ஜனாதிபதியின் அறிவித்தல் இன்று வெளியாகும்!

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2025 • 3:12 AM

மன்னார் காற்றாலைகளை அமைக்கும் பணி நடக்கும்; ஜனாதிபதியின் அறிவித்தல் இன்று வெளியாகும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணிகளைத் தடை இன்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
  • எனினும், இந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகத் தொடர்ந்து நேற்று 51ஆவது நாளாகப் பொது அமைப்புகள் தமது எதிர்ப்பைக் காட்டிப் போராடி வந்தன.
  • இந்தநிலையில் திட்டமிட்டபடி 14 காற்றாலைகளையும் அமைக்கும் பணியை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
  • சௌத்பார், தாழ்வுப்பாடு பகுதிகளில் நான்கு காற்றாலைகளும், பொன்னையன் குடியிருப்பு முதல் பேசாலை வரை உள்ள பகுதியில் 10 காற்றாலைகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
எழுத்து அளவு:

பணிகளைத் தடை இன்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

அது தொடர்பில் அரசினதும் ஜனாதிபதியினதும் தீர்மானம் அடங்கிய அறிவுறுத்தல் பெரும்பாலும் இன்று மன்னார் செயலகத்துக்குக் கிடைக்கும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இந்தக் காற்றாலைகளை அமைக்கும் பணிக்கு எதிராக மன்னாரில் பொதுமக்கள் மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சு நடத்தி விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு ஒரு மாத காலஅவகாசமும் அவரினால் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகத் தொடர்ந்து நேற்று 51ஆவது நாளாகப் பொது அமைப்புகள் தமது எதிர்ப்பைக் காட்டிப் போராடி வந்தன. இந்தநிலையில் திட்டமிட்டபடி 14 காற்றாலைகளையும் அமைக்கும் பணியை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நாட்டைவிட்டு புறப்படும் முன்னர் ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியிருந்தார் எனத் தெரியவருகின்றது.

சௌத்பார், தாழ்வுப்பாடு பகுதிகளில் நான்கு காற்றாலைகளும், பொன்னையன் குடியிருப்பு முதல் பேசாலை வரை உள்ள பகுதியில் 10 காற்றாலைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இவற்றில் நான்கு காற்றாலைகள் சீலெக்ஸ் நிறுவனத்தினாலும், ஏனைய பத்து காற்றாலைகளும் ஹெலீஸ் நிறுவனத்தினாலும் அமைக்கப்பட இருக்கின்றன.

இலங்கையில் அமைக்கப்படும் இத்தகைய ரக காற்றாலைகளில் அதிக கூடிய மின்னை உற்பத்தி செய்யக்கூடிய, அதி நவீன காற்றாலைகள் இந்தப் பதினான்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒவ்வொன்றும் ஐந்து மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் காற்றாலைகள் திட்டமிட்டபடி அமைக்கப்படும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால், அதனை ஆட்சேபித்து வரும் பொதுத் தரப்புகள் இது விடயத்தில் அடுத்த கட்டமாக என்ன முடிவை எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...