Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தங்காலையில் மீட்ட ரூ. 9,888 மில். பெறுமதியான போதைப்பொருள் 'உனாகுருவே சாந்த'வினுடையது எனச் சந்தேகம்!

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2025 • 2:54 AM

தங்காலையில் மீட்ட ரூ. 9,888 மில். பெறுமதியான போதைப்பொருள் 'உனாகுருவே சாந்த'வினுடையது எனச் சந்தேகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
  • தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதற்கமைய 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தங்காலை பகுதியில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 'உனாகுருவே சாந்த' என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3 லொறிகளில் இருந்து நேற்று இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dryt46534.jpg

 

ry5e654t.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...