Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்’

T

The Leader Desk

மார்ச் 27, 2024 • 1:25 PM

‘நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
  • அதாவது, இந்த நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
  • “ஏனென்றால் 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர்.
எழுத்து அளவு:

நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, இளம் பெண்ணொருவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கான அறிவிப்பு, ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கண்டி நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, முன்னாள் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் நெருக்கடி ஏற்படும். எனவே பெரும்பாலும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதாவது, இந்த நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

“ஏனென்றால் 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

“நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ளார். இந்த நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாகவே இதனை கருத வேண்டும்” என்று, ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...