கொடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இதற்கான மாற்று நிலங்கள் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இனங்காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், குறுகிய காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் உரையின் முக்கிய அம்சங்கள்:
"6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. சில வீடுகள் சேதமடையாவிட்டாலும், அவை அமைந்துள்ள பகுதிகள் பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மாவட்டச் செயலாளர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ள மாற்று நிலங்களில் வீட்டுத்தொகுதிகளை அமைக்கவே நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஜனாதிபதி செயலகம் இணைந்து செயற்படுகிறது. எமது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து ஆரம்பகட்ட வரைபடங்கள் மற்றும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
"பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வரும் அதேவேளை, எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்ளாத வகையில், அதிக அபாயகரமான வலயங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியேற்ற நாம் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க நடவடிக்கை!
T
The Leader Desk
டிசம்பர் 22, 2025 • 6:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
- இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இதற்கான மாற்று நிலங்கள் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இனங்காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
- அமைச்சரின் உரையின் முக்கிய அம்சங்கள்: "6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
- சில வீடுகள் சேதமடையாவிட்டாலும், அவை அமைந்துள்ள பகுதிகள் பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

