ஆக்ரோஷமானவர்கள், எங்களோடு விளையாட வர வேண்டாம்" என்பது போன்ற பேச்சுகளே அடிபட்டன. இந்த ஜென்சி கதைகளைக் கொண்டாடியவர்களில் பலர், எங்களை விட வயதானவர்கள்.
ஒவ்வொரு தலைமுறையிலும் தீவிரமான, புரட்சிகரமான, முதிர்ச்சியற்ற இளைஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் வன்முறைப் போக்கை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியாது. ஜென்சி தலைமுறையைக் கொண்டாடியவர்கள், இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியின் கண்களைப் பார்த்து இந்தப் பதிவை வாசியுங்கள்.
பங்களாதேஷ் புரட்சியின் இருண்ட நிழல்கள்: ஏழு வயது ஆயிஷா அக்தரின் சோகம்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னரான அரசியல் மாற்றம், தற்போது கட்டுப்பாடற்ற வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த குழப்பத்தின் புதிய மற்றும் மிகச்சோகமான பலியாக ஏழு வயது சிறுமி ஆயிஷா அக்தர் மாறியுள்ளார்.
சமீபத்தில் லக்ஷ்மிபூர் (Lakshmipur) பகுதியில் மிலேச்சத்தனமான கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளானது ஆயிஷாவின் தந்தையான பெலால் ஹொசைனின் இல்லமாகும். பெலால் ஹொசைன் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) உள்ளூர் தலைவராவார். நள்ளிரவில் புகுந்த காடையர் கும்பல் அவரது வீட்டிற்குத் தீ வைத்தது. அந்தத் தீயில் ஏழு வயது சிறுமி ஆயிஷா உயிருடன் எரிந்து பலியானார். அவரது தந்தையும் ஏனைய இரண்டு சகோதரிகளும் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பங்களாதேஷ் அரசியலின் தற்போதைய சோகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. மாணவர் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலையைக் கண்டிப்பதாகக் கூறிக்கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹாடி என்பவர் அவாமி லீக்கிற்கு எதிராகப் போராடிய ‘Gen Z’ தலைமுறையின் ஒரு தலைவராவார். ஹாடியின் கொலைக்குப் பழிவாங்குவதாகக் கூறி வீதிக்கு இறங்கிய கும்பல், அவாமி லீக்கின் எதிரிகளான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் (BNP) தலைவரைத் தாக்கியிருப்பது ஒரு பாரிய முரண்பாடாகும்.
பங்களாதேஷில் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் வெறும் பழிவாங்கல் மற்றும் கொள்ளையிடுவதை நோக்கமாகக் கொண்ட காடையர் பலம் தலைதூக்கியுள்ளதையே இது உணர்த்துகிறது. "புரட்சி"க்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் சில குழுக்கள், தமது சொந்த அரசியல் எதிரிகளை வேட்டையாட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, இவ்வாறான சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சி முற்றாக சீர்குலைந்துள்ளதைக் காட்டுகின்றன. ஏழு வயது ஆயிஷாவின் சாம்பல் மீது கட்டியெழுப்பப்படும் ஜனநாயகம் என்னவென்று பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் உலகிற்குப் பதிலளிக்க வேண்டும்.


