ரூ. 703 பில்லியனால் அதிகரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
2024 அக்டோபரில் ரூ. 293 ஆக இருந்த டொலரின் மதிப்பு, தற்போது ரூ. 312 வரை (ரூ. 19 இனால்) அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு கடனின் மதிப்பின் அடிப்படையில், இதனால் ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை ரூ. 703 பில்லியன் (37 பில்லியன் டொலர் x ரூ. 19) ஆகும்.
இலங்கை மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரைவான நிதி வசதியின் (Rapid Financing Instrument) கீழ் வழங்கப்படும் சுமார் 206 மில்லியன் டொலர் நிதியுதவியை விட, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையை எளிதாக விளக்கினால், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 அலகினால் வீழ்ச்சியடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெளிநாட்டு கடன் சுமை மேலதிகமாக 37 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும்.
2022 ஆம் ஆண்டில் ரூபாய் வீழ்ச்சி மற்றும் ஏனைய காரணிகளால் பொருளாதாரம் சரிந்தபோது, மத்திய வங்கி மாற்று விகிதங்களின்படி டொலர் ரூ. 361 வரை உயர்ந்தது (வர்த்தக வங்கிகளில் இது ரூ. 400 ஐத் தாண்டியிருந்தது). கடந்த அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தால் டொலர் ரூ. 293 வரை வலுவடைந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக ரூபாய் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தவறியமை, வெளிநாட்டு கடன் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிக்கக் காரணமாகும். இறுதியில், இந்த ரூ. 700 பில்லியன் தொகையை மக்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலமே ஈடுசெய்ய வேண்டியிருக்கும்.
2025 மார்ச் மாதம் 6,531 மில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, 2025 நவம்பரில் 6,033 மில்லியன் டொலராக, அதாவது 8 மாதங்களில் 498 மில்லியன் டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


