Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

காற்றுத் தரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 22, 2025 • 5:50 AM

காற்றுத் தரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரச் சுட்டெண் தற்போது 150 முதல் 200 வரை நிலவுகின்றது.
  • கடந்த சில நாட்களாக காற்றின் தரம் குறைவடைந்து வருவதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அயல் நாடுகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதே இந்நிலைக்குக் காரணம் என கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரச் சுட்டெண் தற்போது 150 முதல் 200 வரை நிலவுகின்றது.

கடந்த சில நாட்களாக காற்றின் தரம் குறைவடைந்து வருவதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் மிக்க நபர்களுக்கு (Sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசக் கோளாறுகள் அல்லது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக்கொண்டார்.

அயல் நாடுகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதே இந்நிலைக்குக் காரணம் என கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மனித நடவடிக்கைகளும் காற்றின் தரம் குறைவதற்குப் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தீ மூட்டுதல், வாகனப் புகை போன்றவை இதற்குக் காரணமாக அமைவதோடு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையானது நாட்டின் காற்றின் தரச் சுட்டெண் அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...