கவனம் செலுத்தி வருகிறது.
தங்களது பற்றாக்குறைகள் குறித்துத் தெரிவித்து விண்ணப்பிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவே இவ்வாறு கொடுப்பனவு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் சலுகைகள் அல்லது வசதிகள் என்னென்ன என்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அண்மையில் கிடைத்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணைவர்கள் (மனைவி அல்லது கணவர்) உட்பட 512 பேரின் ஓய்வூதியம், ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இல்லாமல் போகும்.


