கட்டமைக்கப்பட்ட 'மக்கள் பற்றிய உரையாடல்' பௌதிகமாக இடப்பெயர்ச்சி (Dislocation) அடையும் ஒரு தருணம் மற்றும் அதற்கு பதிலளிக்கக் கூடிய ஒழுக்கவியல் ரீதியான அரசியல் செயல் (Ethical Political Act). அதாவது ஒரு அரசியல் காரணி (Political Subject).
கோட்டாபயவின் வெற்றியின் மூலம் முதிர்ச்சியடைந்த மற்றும் 'பொஹொட்டுவ'வின் அரசியல் செயற்பாட்டின் மூலம் அன்று கட்டமைக்கப்பட்ட மக்கள், அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதாரப் பேரழிவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டனர்.
இதன் மூலம், 'மக்களை' மீண்டும் கட்டியெழுப்ப வரலாறு திறக்கப்பட்டது. பாரிய மக்கள் போராட்டத்தின் ஒழுக்கவியல் தலையீட்டின் மூலம் 2022ஆம் ஆண்டளவில் ஒரு புதிய மக்கள் (கற்பனையாக) கட்டமைக்கப்பட்டனர். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றியானது, அந்தப் புதிய மக்கள் கூட்டு கற்பனைக்கே பதிலளிப்பதாக அமைந்தது.
எவ்வாறாயினும், போராட்டத்திற்குப் பிந்தைய 'தே.ம.ச. மக்கள்' கூட மீண்டும் இடப்பெயர்ச்சிக்குத் திறந்திருக்கும் ஒரு விடயம்தான். திருப்தியற்ற பொருளாதார-சமூக வாழ்க்கை மிகவும் பௌதிகமாக எதிர்கொள்ளப்படும் தருணத்தில், 'மக்கள்' என்ற உரையாடலைக் மீண்டும் கட்டியெழுப்ப வரலாறு திறக்கப்படும். அப்போது, அந்த துண்டுபட்ட வரலாற்றுத் தருணத்துக்கு பதிலளிக்கக் கூடிய ஒழுக்கவியல் ரீதியான அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில், நாமல் தலைமையிலான பொஹொட்டுவினால் அந்தப் பதிலளிப்பைச் செய்ய முடியாது என்பது உண்மை. 'மாற்றமடைந்த மக்களுக்கும்' பொஹொட்டுவவின் அழைப்புக்கும் இடையில் இன்னமும் பிணைப்பின்மை (Disconnection) காணப்படுகிறது என்பதும் உண்மை.
ஆயினும், 'மக்கள்' என்ற உரையாடல் ரீதியான கட்டமைப்பானது மீண்டும் மாறுவதற்குத் திறந்திருக்கிறது என்பதையும், அரசாங்கத்துடனான மக்களின் பிணைப்பு படிப்படியாக தளர்ந்து வருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இப்போது இருப்பது அரசியல் மாற்றத்திற்கு அனுமதி அளித்த மக்கள்தான், சமூக மாற்றத்துக்கு உட்பட்ட மக்கள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதன்படி, இன்றைய மொட்டு-ஐ.தே.க பேரணியில் மக்களின் பங்கேற்பைக் குறைத்து மதிப்பிட்டு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ந்தாலும், இந்த மக்கள் பேரணியை 'மக்கள்' மீண்டும் உருவாக்கப்படும் அரசியல் வடிவம் என்ன என்பதை நினைவுபடுத்திய ஒரு சமிக்ஞையாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் படிப்படியாக மேலும் ஒரு சாதாரண அரசாங்கமாக மாறிவரும் சூழ்நிலையில், பலவீனமான எதிரியாக இருந்தாலும், அவர்களைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதிரியாக கருதுவது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்கு நல்லது.
(குறிப்பு| விதர்ஷன கன்னங்கர)


