அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் 30 பேர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, அச்சுவேலியில 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55- 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 55 கிலோ மீட்டர் வரை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பின்வருமாறு,
பிற்பகல் 03.35 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை
இரவு 08.30 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு தபால்)
பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு தபால்)
மலையக ரயில் பாதையில் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


