அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் பச்சையரிசி ஒரு கிலோகிராமின் உச்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோகிராமின் உச்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சம்பா ஒரு கிலோகிராமின் உச்ச சில்லறை விலை 230 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பொன்னி சம்பா ஒரு கிலோகிராமின் உச்ச விலை 240 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கீரி பொன்னி சம்பா ஒரு கிலோகிராமின் உச்ச சில்லறை விலை 255 ரூபாவாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


